அமைச்சுகள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் பயன்படுத்தும் வாகனங்கள் தொடர்பில் வெளியாகவுள்ள அறிவுறுத்தல்
அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் பயன்படுத்தும் வாகனங்களின் பாவனை தொடர்பிலான புதிய அறிவுறுத்தல்களை அரசாங்கம் விரைவில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு சொந்தமான 600 தொடக்கம் 700 வரையிலான வாகனங்களை அரச தலைவர்கள் அலுவல்கள் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்துவதால் வருடாந்தம் 500 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணம் விரயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விசாரணை
இது தொடர்பாக எத்தனை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டாலும், வாகனங்களை முறைகேடு செய்வது தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஒரே அரசியல் நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகள் தனித்தனி வாகனங்களில் வருவதையும் இதனால் பெருமளவு பணம் விரயமாகி வருவதையும் அரசாங்கம் கவனித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலைமையை கருத்திற்கொண்டு அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் பயன்படுத்தும் வாகனங்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 42 நிமிடங்கள் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
