இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் நாளொன்றுக்கு செலவிடம் தொகை
இலங்கையின் சுற்றுலா துறையில் கிடைக்கும் அந்நியச் செலாவணி வருமானம், பயணிகள் தங்கும் காலம், தினசரி செலவு, பருவகாலம் மற்றும் அவர்கள் வரும் நாடுகளைப் பொறுத்து மாறுபடுகிறது.
இதனை இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் புதிய தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
12 மாத வெளியேறும் கணக்கெடுப்பின் படி, ஒரு சுற்றுலாப் பயணி சராசரியாக 148.26 டொலர்களை செலவிடுகிறார்.
செலவிடும் தொகை
குழுவாக வரும் சுற்றுலாப் பயணிகள் தனிப்பட்ட பயணிகளை விட அதிகம் செலவிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து, ஜெர்மனி, ரஸ்யா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் அதிக செலவினம் செய்யும் பயணிகளாக கருதப்படுகின்றனர்.
குறிப்பாக, இங்கிலாந்து மற்றும் ரஸ்ய சுற்றுலாப் பயணிகள் தினசரி அதிகம் செலவிடுகிறார்கள்.
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
இந்தநிலையில் 2025 ஆம் ஆண்டின் சுற்றுலா வருமானம் 3 பில்லியன் டொலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் ஜனவரி முதல் டிசம்பர் 25 வரை, இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2.29 மில்லியன்களை கடந்துள்ளது.
இதேவேளை சுற்றுலாப் பயணிகளின் செலவுகள் தற்போது தங்குமிடங்களை விட, உணவு, உள்ளூர் அனுபவங்கள் மற்றும் சிறு வணிகங்கள் நோக்கி அதிகம் மாறி வருவதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் தரவுகள் கூறுகின்றன.