கணக்காய்வாளர் நாயகம் பதவி வெற்றிடம் தொடர்பிலான சர்ச்சை நீடிப்பு
நாட்டில் கணக்காய்வாளர் நாயகம் பதவி வெற்றிடம் தொடர்பில் தொடர்ந்தும் சர்ச்சை நிலைமை தொடர்ந்து நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெற்றிடமாக உள்ள அரசின் கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மேலும் ஒரு பெயரை முன்மொழிந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் அரசியலமைப்பு சபை கூடவுள்ளதாகவும், அங்கு இதற்கான இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்பு நான்கு முறை ஜனாதிபதி அந்த பதவிக்காக நான்கு பெயர்களை முன்மொழிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், அரசியலமைப்பு சபை தகுந்த முறையில் தனது நிர்வாக அதிகாரத்தை செயல்படுத்தாத காரணத்தால் இதுவரை கணக்காய்வாளர் நாயகம் பதவி வெற்றிடமாகவே உள்ளது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல மாதங்களாக சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள இந்த முக்கிய பதவிக்கான புதிய நியமனம் குறித்து அரசியல் வட்டாரங்களில் கடும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த பதவி வெற்றிடத்தை நிரப்புமாறு மாநாயக்க தேரர்களும் ஜனாதிபதியிடம் நேரடியாக கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகக்து.
இதேவேளை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் முன்மொழியப்படும் பெயர்களை அரசியல் அமைப்புச் சபை அடிப்படையற்ற வகையில் நிராகரித்து வருவதே இந்த சர்ச்சைக்கான காரணம் என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விஜய் சேதுபதி Cineulagam
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam