கிளிநொச்சியில் திடீரென களத்தில் இறங்கிய அதிகாரிகள்.. அச்சத்தில் பதறியடித்த அமைப்புக்களின் பிரதிநிதிகள்
புதிய இணைப்பு
இன்றையதினம் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதம ஆணையாளர் அலுவலகத்திலும் முக்கிய ஆவணங்களை பெற்றுக் கொள்ளும் பொருட்டு தேசிய கணக்காய்வு திணைக்களம் ஆரம்ப விசாரணைகள் நடத்தி வருகின்றனர்.
முதலாம் இணைப்பு
கிளிநொச்சி - இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் மற்றும் கிளிநொச்சி கமநல சேவையத்தின் கீழ் உள்ள மகிழங்காடு கமக்கார அமைப்பு ஆகியவற்றின் நிதி முறைகேடுகள் தொடர்பில் தேசிய கணக்காய்வு திணைக்கள அதிகாரிகளால் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் கீழ் உள்ள விவசாயிகளிடமிருந்து கடந்த 2013ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதிகளில் அறவிடப்பட்ட பெருந்தொகையான நிதியானது உரிய கணக்கு முறைகள் பயணப்படாமல் உள்ளன என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவை வங்கிகளில் வைப்பிலிடப்படாமலும் கூட்டத் தீர்மானங்கள் இன்றியும் தான்தோன்றித்தனமாக நிதி செலவிடுகள் மேற்கொள்ளப்பட்டமை மற்றும் கிளிநொச்சி கமநல சேவை நிலையத்தினால் முறைகேடான முறையில் மகிழங்காடு கமக்கார அமைப்பின் ஊடாக மானிய உரம் பெற்றுக் கொள்ளப்பட்மை உரத்திற்கான நிதிகளை பெற்றுக் கொண்டமை தொடர்பிலும் என பல்வேறு குற்றச்சாட்டுகள் விவசாயிகளால் முன்வைக்கப்பட்டது.
முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
இதை அடுத்து நேற்றைய தினம் (08-01-2026) கிளிநொச்சிக்கு வருகை தந்த தேசிய கணக்காய்வு திணைக்கள அதிகாரிகளால் இரத்தினபுரம் கிராம அலுவலர் அலுவலகத்தில் வைத்து ஆரம்ப கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், நிதி முறைகேடுகள் தொடர்பில் மேலதிக விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு இரணைமடுக்குளத்தின் திட்ட முகாமைத்துவ அலுவலகத்தில் களஞ்சியப்படுத்தி வைத்திருந்த பற்றுச்சீட்டு புத்தகங்கள் மற்றும் சில ஆவணங்களையும் அதன் பிரதிநிதிகளையும் பெற்றுச் சென்றுள்ளனர். அத்துடன் உரவிநியோகம் தொடர்பிலான முறைகேடுகள் இடம்பெற்றமை தொடர்பாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதன்படி, கிளிநொச்சி கமநல சேவை நிலையத்தில் இருந்த ஆவணங்களையும் மகிழங்காடு கமக்கார அமைப்பில் இருந்த ஆவணங்களையும் மேலதிக விசாரணைகளுக்காக கொண்டு சென்றுள்ளனர்.

இன்று பகல் 10 மணி முதல் பிற்பகல் மாலை 5. 15 மணி வரை குறித்த விசாரணை கிளிநொச்சி - இரத்தினபுரம் கிராம அலுவலர் அலுவலகத்தில் வைத்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்மேளத்தின் காசோலைகள் வங்கி கணக்கு புத்தகம் என்பவற்றை அதன் பொருளாளர் கையளிக்காமலும் விசாரணைகளுக்கு சமூகமளிக்காமலும் இருந்துள்ளது.
இவ்வாறு விவசாய அமைப்புக்கள் தொடர்பிலும் கமநல சேவை நிலையத்திலும் தேசிய கணக்காய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் முதலாவது விசாரணை இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
Bigg Boss: சட்டென பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan