உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையை கோரும் சட்டமா அதிபர்
உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பில் விசாரணையை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை ஒன்றை தருமாறு சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டமா அதிபரின் இணைப்பாளர் நிஷாரா ஜெயரத்ன இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளரிடம் இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகவே இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளதாக நிஷாரா தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவின் அறிக்கை ஏற்கனவே 2021 பெப்ரவரி முதலாம் திகதியன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணைக்குழு 2019 ஆம் ஆண்டு செப்டம்பரில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைக்கப்பட்டது.
2020இல் இந்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் முடிவடைந்தநிலையில் 2021 ஜனவரி 31 வரை அதன் காலம் நீடிக்கப்பட்டது.





படப்பிடிப்பில் கொண்டாட்டத்தில் இறங்கிய கார்த்திகை தீபம் சீரியல் பிரபலங்கள்... என்ன ஸ்பெஷல், போட்டோஸ் இதோ Cineulagam

பெண்கள் பிளான் எல்லாம் சுக்குநூறாக போகிறது, தர்ஷனை காப்பாற்றுவது எப்படி.. எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
