சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம்
பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் ஏற்பாட்டில் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் ஏ9 வீதியில் அமைந்துள்ள கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றுள்ளது.
சிறுவர் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறையை நிறுத்த கோரியும், குற்றவாளிகளை பாதுகாக்காது அவர்களிற்கு தண்டனை வழங்க கோரியும் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசங்கள் எழுப்பியிருந்தனர்.
இதேவேளை நீதிமன்ற சாட்சியங்களை அச்சுறுத்த வேண்டாம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
சுமார் 30 நிமிடங்கள் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் சுகாதாரநடைமறைகளை பின்பற்றி இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்துள்ளனர்.




                                            
                                                                                                                                    
    
    
    
    
    
    
    
    
    
    அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri