மலையகத்தில் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாத மாணவர்களின் வருகை
மலையகத்தில் சுகாதார நடைமுறைகளுடன் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை மீண்டும் ஆரம்பமாகியிருந்தாலும் மாணவர்களின் வருகை என்பது இன்னும் முழுமையாக இல்லை என தரவுகள் தெரிவிக்கின்றன.
பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள சில தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளில் மாணவர்களின் வருகையானது 30 வீதத்துக்கும் குறைவாகவே இருப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
அதிபர்கள், ஆசிரியர்கள் உட்படப் பாடசாலை நிர்வாகத்தினர் சமூகமளிக்கின்ற போதிலும், மாணவர்களைப் பாடசாலைக்கு அனுப்புவதற்கு சில பெற்றோர் இன்னும் தயக்கம் காட்டும் நிலை நீடிக்கின்றது.
சமூக இடைவெளியைப் பேணுவதற்காக ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு இரண்டு கட்டங்களாகக் கல்வி நடவடிக்கை இடம்பெறுகின்ற நிலையிலும், 100 சதவீத வருகை இன்னும் உறுதியாகவில்லை.
குறிப்பாக ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட ஹட்டன் ஶ்ரீபாத சிங்கள பாடசாலையில் சுமார் 600 மாணவர்கள் கல்வி பயிலும் நிலையில் இன்று (01.02.2021) ஆறுமாணவர்கள் மாத்திரமே வருகை தந்திருந்தனர் எனப் பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.
இப்பாடசாலையில் தரம் 3 இல் கல்வி பயிலும் மாணவரொருவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அதன்பின்னரே வருகை நன்றாகவே வீழ்ச்சியடைந்துள்ளது எனக் கூறப்படுகின்றது.













சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri
