இந்தியாவில் இருந்து சிவப்பு பச்சை அரிசியை தருவிக்கும் முயற்சி தோல்வி
இந்தியாவில் சிவப்பு பச்சை அரிசி கிடைக்காததால், அங்கிருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்கான முயற்சிகள் தோல்வியடைந்ததாக வர்த்தக விவகார, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
உள்ளூர் சந்தையில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை சமாளிக்க சிவப்பு பச்சை அரிசியை இறக்குமதி செய்ய இந்திய உயர்ஸ்தானிகரகம், மற்றும் இந்திய விநியோகஸ்தர்களுடன்; அரசாங்கம் கலந்துரையாடியதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் அந்த முயற்சி தோல்வியடைந்ததாக அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள ஆலைகளிலும் சிவப்பு பச்சை அரிசி கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
சிவப்பு அரிசி
எனினும் நிலைமையை எப்படியாவது சமாளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் முந்தைய அரசாங்கத்தால் சிவப்பு அரிசியை இலவசமாக விநியோகித்தது பற்றாக்குறையை அதிகப்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் பீயர் உற்பத்தி தொழில், கோழிப்பண்ணைகள், அலங்கார மீன் வளர்ப்புத் தொழில் மற்றும் அரிசி மாவுக்கும் அரிசி பயன்படுத்தப்படுகிறது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
குணசேகரன் பினானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri