மட்டு. கொண்டையங்கேணி தமிழர்களுடைய பூர்வீக கிராமம்! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
தனித் தமிழ் மக்கள் வாழும் வாழைச்சேனை கொண்டையங்கேணி கிராமம் இன்று ( 03.02.2026 ) கொண்டயன்கேணி முஸ்லிம் கிராமம் என்று உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழர்களுடைய பூர்வீக கிராமங்களின் பெயர்களை தங்களுடைய கிராமங்கள் என தெரிவித்து எதிர்காலத்தில் இந்த கிராமத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள் என அபகரிப்பதற்காக செயற்படுகின்றனர்.
இதனை வன்மையாக கண்டிப்பதாக கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தனபாலசிங்கம் நிர்மலன் தெரிவித்தார்.

அதேவேளை கல்குடா என்று அழைப்பது தொடர்பாக பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கவனத்திற்கு கொண்டுவந்து இவ்வாறு இயங்குகின்ற அமைப்புக்களை தடைசெய்து அவர்கள் அவர்களுடைய பிரதேசத்தில் அவர்களுடைய அமைப்புக்களை நடாத்துவதில் எந்தவித பிரச்சனையும் இதற்கு இல்லை தீர்வுகளை பெற்றுதருமாறு கோரியுள்ளேன்.
அதேவேளை கல்குடா என இன்னொரு கிராம சேவகர் பிரிவை அடையாளப்படுத்தி அவர்களுடைய அடையாளம் என இனிவரும் காலங்களில் காட்டக்கூடாது.
ஒரு இனத்தின் உடைய மொழியும் அடையாளமும் முகவரியும் எங்கு களவாடப்படுகின்றதே அங்கே இந்த இனத்திக்கு எதிரா வன்முறையும் பயங்கரவாதமும் தோற்று விக்கப்படுகின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.