கோட்டாபய மீதான கொலைச் சதி! 15 வருடங்களின் பிறகு விடுதலையான தமிழ் அரசியல் கைதி

Colombo Gotabaya Rajapaksa Sri Lanka Final War K.V.Thavarasha
By Benat May 16, 2023 03:52 PM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பாதுகாப்பு செயலாளராக இருந்த காலப்பகுதியின் போது, அவர் மீதான கொலை முயற்சி வழக்கில்  2008ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பொறியியலாளரான சிவலிங்கம் ஆருரனை கொழும்பு மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. 

அரச இலக்கிய விருது பெற்ற அரசியல் கைதியான இவர், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசாவின் வாதத்தினை அடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்கவால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

2006ம் ஆண்டு மார்கழி மாதம் முதலாம் திகதி கொழும்பு - கொள்ளுபிட்டி பித்தலைசந்தியி பகுதியில் அப்போதைய பாதுகாப்பு செயளாளரான கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்கொலை குண்டுதாரியால் நடாத்தப்பட்ட தாக்குதலில் மூன்று இராணுவ பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மரணத்தை விளைவித்ததுடன் பாதுகாப்பு செயளாளரான கோட்டாபய ராஜபக்ச,  இராணுவ பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொது மக்களுக்கு கடும் காயங்களை ஏற்படுத்தியதுடன் அரசசொத்துக்களுக்கு பெரும் சேதம் விளைவித்ததாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் 2012ஆம் ஆண்டு மார்கழி மாதம் நான்காம் திகதி குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

உண்மை விளம்பல் விசாரணை 

இந்த குற்றச்சாட்டுப் பத்திரத்தில், கைதியான சிவலிங்கம் ஆருரன் பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிசாரின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருக்கையில் பொலிஸ் அத்தியட்சகருக்கு சுயவிருப்பத்தில் வழங்கியதாக கூறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அரச தரப்பின் பிரதான சான்றாக முன்வைக்கப்பட்டு குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

கோட்டாபய மீதான கொலைச் சதி! 15 வருடங்களின் பிறகு விடுதலையான தமிழ் அரசியல் கைதி | Attempt To Kill Gotabaya Court Case

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பொழுது அரச தரப்பின் பிரதான சான்றான குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சுயமாக எதிரியினால் வழங்கப்படவில்லை என்ற ஆட்சேபனை எதிரி சார்பில் முன்வைக்கப்பட்டதை அடுத்து உண்மை விளம்பல் விசாரணை நடைபெற்றது.

உண்மை விளம்பல் விசாரணையில் கைதியான சிவலிங்கம் ஆருரனை பொலிசார் சித்திரவதை செய்து கடும் காயங்களை ஏற்படுத்தி குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தினை பெற்றுக் கொண்டனர் என்பதனை சாட்சியங்கள் மூலம் எதிரி தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளமையை  ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா தனது வாதத்தில் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு  வந்தார்.

இதனையடுத்து, அரச தரப்பின் முக்கிய சான்றாக முன்வைக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க நிராகரிப்பதாக கட்டளை வழங்கினார்.

கோட்டாபய மீதான கொலைச் சதி! 15 வருடங்களின் பிறகு விடுதலையான தமிழ் அரசியல் கைதி | Attempt To Kill Gotabaya Court Case

குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை நிராகரிப்பதாக நீதிமன்றம் கட்டளை வழங்கியதையடுத்து எதிரிதரப்பில் முன்னிலையான  ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா  இந்த அரசியல் கைதி 15 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்து இந்தக் கைதிக்கு எதிராக வழக்கை மேலும் தொடர்ந்தும் நடாத்த வேறு அரச சாட்சியங்கள் இல்லையாயின் கைதியை விடுதலை செய்யும்படி தனது சமர்ப்பணத்தில் வேண்டிக் கொண்டார்.

இதனையடுத்து, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையாகிய பிரதிசொலிசிடர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி ரோகாந்த அபேசூரிய வேறு சாட்சியங்கள் இல்லையென நீதிமன்றிற்கு அறிவித்ததையடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க சிவலிங்கம் ஆருரனை விடுதலை செய்தார்.

இந்த வழக்கில் அரச தரப்பில்க பிரதிசொலிசிடர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி ரோகாந்த அபேசூரிய முன்னிலையாகியதுடன் எதிரி சார்பில் சட்டத்தரணிகளான  தர்மராஜா,  தர்சிகா தர்மராசா  ஆகியோரின் அனுசரணையில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா ஆஜரானார்.      

கோட்டாபய மீதான கொலைச் சதி! 15 வருடங்களின் பிறகு விடுதலையான தமிழ் அரசியல் கைதி | Attempt To Kill Gotabaya Court Case

கோட்டாபய மீதான கொலைச் சதி! 15 வருடங்களின் பிறகு விடுதலையான தமிழ் அரசியல் கைதி | Attempt To Kill Gotabaya Court Case


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


3ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில்

22 Sep, 1995
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada, Windsor, Canada

21 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, பிரான்ஸ், France, ஜேர்மனி, Germany

22 Sep, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

அல்வாய், சங்கத்தானை

18 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

மன்னார், உயிலங்குளம், Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
அகாலமரணம்

மண்கும்பான் மேற்கு, பிரான்ஸ், France

05 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கிளிநொச்சி

19 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

16 Sep, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஜேர்மனி, Germany

20 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு

17 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊராங்குனை, Eschborn, Germany

01 Oct, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Markham, Canada

18 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா, கிளிநொச்சி, சென்னை, India

18 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US