அனுமதியில்லாத சீனாவின் கோவிட் தடுப்பூசிகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய முயற்சி
நம்பகமான தரவு இல்லாமல் சீனாவின் கோவிட் தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கான முயற்சி என்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கை மருந்தாக்கல் கட்டுப்பாட்டாளரின் நான்கு முக்கிய உறுப்பினர்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் நான்கு உறுப்பினர்களான நன்கு அறியப்பட்ட சுகாதார நிபுணர் வைத்திய கலாநிதி பாலித அபேகூன், மேலாண்மை நிபுணர் வைத்திய கலாநிதி கபில ரணசிங்க, கணக்கியல் நிபுணர் எம்.கே. ஹர்ஷனா கருணாரத்ன மற்றும் சட்டத்தரணி சமிண்திகா ஹெரத் ஆகியோரே பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமனவினால் மார்ச் 8 திகதியிட்டப்பட்டு கையெழுத்திட்ட பணிநீக்க கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் குறித்த நான்கு பேருக்குப் பதிலாக புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அறிவுக்கரசியால் ஜனனியின் தொழிலுக்கு ஏற்பட்ட பெரும் துயரம், எப்படி சமாளிக்க போகிறார்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri