யால தேசிய பூங்காவிலிருந்து 12,000 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயற்சி! அமைச்சர் சி. பி. ரத்நாயக்க மறுப்பு
யால தேசிய பூங்காவிலிருந்து 12,000 ஏக்கர் நிலத்தை அபகரிக்கும் முயற்சி குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்ட அறிக்கையை வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி. பி. ரத்நாயக்க மறுத்துள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர், இதுபோன்ற எந்த திட்டமும் அரசாங்கத்தால் செயல்படுத்தப்படவில்லை என்று கூறினார்.
ஒரு பொறுப்புள்ள அமைச்சராக, யால தேசிய பூங்காவில் இதுபோன்ற செயல்களை தாம் அனுமதிக்க முடியாது. இதுபோன்ற திட்டம் அமுல்படுத்தப்படுவதற்கு முன்னதாக ஒரு முன்மொழிவு முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
இதுவரை இதுபோன்ற எந்த திட்டமும் முன்வைக்கப்படவில்லை என்று அமைச்சர் கூறினார். இந்த விவகாரத்தில் வதந்திகள் பரவி வருகின்றன.
ஆனால் அமைச்சராக, தாம், எதிர்க்கட்சித் தலைவர் கூறிய கூற்றை முற்றிலுமாக மறுப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் , யால வனப்பகுதியில் யாரும் தலையிட அனுமதிக்கபோவதில்லை என்றும் கூறினார்.
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri