பாடசாலை விளையாட்டு மைதானத்தை தனியார் ஒருவருக்கு விற்பனை செய்ய முயற்சி: பொதுமக்கள் போராட்டம் (Photos)
கிளி/சோறன்பற்று கணேசா வித்தியாலயத்தின் நூறு வருடங்களாக பாவனையில் இருந்த விளையாட்டு மைதானத்தை தனியார் ஒருவருக்கு விற்பனை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் புதுக்காட்டுச் சந்தி- தாழையடி வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இப் பாடசாலைக்கு அருகாமையில் உள்ள தனியார் காணியினை பாடசாலை நிர்வாகம் சுமார் 100 வருடங்களாக விளையாட்டு மைதானமாக பாவித்து வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
அக் காணியினை பெற்றுக் கொள்வதற்கு பாடசாலை நிர்வாகம் தயாராக இருந்தது. அதற்கு காணி உரிமையாளரும் ஒப்புக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் அக்காணி தனி நபர் ஒருவருக்கு விற்கப்பட்டதாக தெரிவித்து அங்கு கட்டடம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதை தொடர்ந்து இன்று மாலை 4.00 மணி அளவில் புதுக்காட்டு சந்தி- தாழையடி பிரதான வீதியை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த பளைப் பொலிஸார் போராட்டகாரர்களுடன் கலந்துரையாடி பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யுமாறும் தெரிவித்ததை தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றுள்ளனர்.





சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
