முள்ளியவளையில் குடும்ப பெண் மீது தாக்குதல்
முல்லைத்தீவு - முள்ளியவளை, காட்டு விநாயகர் கோவிலுக்கு முன்பாக வீட்டில் இருந்த குடும்ப பெண் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதனையடுத்து குறித்த பெண் ஆபத்தான நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரியவருகிறது.
கடந்த 07.01.2024 அன்று இரவு, பெண்ணின் கணவன் காவலாளி வேலைக்கு சென்ற நிலையில், குறித்த வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாதவர்கள் பெண்ணின் மீது இரும்பு கம்பியொன்றினால் கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகள்
தாக்குதலுக்குள்ளான பெண், தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயத்துடன், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதோடு தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 1 மணி நேரம் முன்
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri