ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்
திருகோணமலையை சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 50 கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போதே நேற்றிரவு (10.01.2024) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் கான்ஸ்டபிள், மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த வேளையில், யுக்திய திட்டத்திற்கு அமைவாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து வில்கம் விகாரை பகுதியில் வைத்து சோதனையிடப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள்
இதன்போது, அவரிடம் இருந்து 50 கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
