கடற்படை முகாமிற்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி: மக்கள் போராட்டம்(Photo)

Sri Lankan Peoples
By Chandramathi Jun 07, 2022 08:29 AM GMT
Chandramathi

Chandramathi

in சமூகம்
Report

வட்டுவாகல் கோத்தபாய கடற்படை முகாமிற்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு, மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் பொதுமக்களின் காணிகளில் அமைந்துள்ள "கோத்தபாய கடற்படை கப்பல்' என்னும் கடற்படை முகாமுக்கு காணிகளை நிரந்தரமாக சுவீகரிப்பதற்கு நில அளவை திணைக்களத்தினரால் இன்று(7) மேற்கொள்ளப்பட்ட முயற்சி காணி உரிமையாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.

கடந்த சில வருடங்களாக வட்டுவாகல் பகுதியில் கடற்படை முகாம் அமைந்துள்ள 617 ஏக்கர் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை கடற்படை முகாமுக்கு நிரந்தரமாக சுவீகரிப்பதற்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு நில அளவை திணைக்களத்தினரின் ஒத்துழைப்போடு அளவீடு செய்து காணி சுவீகரிப்புக்கு கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை மக்கள் தமது எதிர்ப்பு போராட்டங்களால் முறியடித்துள்ளனர்.

மக்களின் போராட்டம்

கடற்படை முகாமிற்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி: மக்கள் போராட்டம்(Photo) | Attempt Expropriate Public Lands Struggle

இந்த நிலையில் இன்றையதினம் காணிகளை சுவீகரிப்பதற்க்காக நில அளவை திணைக்களம் மற்றும் கடற்படையினர் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில் காணி உரிமையாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் நில அளவை திணைக்கள வாகனத்தை கடற்படை முகாமுக்குள் செல்ல விடாது கடற்படை முகாம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அளவீட்டு முயற்சிகள் தடுக்கப்பட்டடுள்ளது.

இதனையடுத்து, காணி உரிமையாளர்களில் 15 பேர் தமது காணிகளை கடற்படை முகாமின் தேவைக்காக வழங்க முன்வந்திருப்பதாகவும் அதனையே அளவீடு செய்யவே வந்திருப்பதாகவும் நில அளவையாளர் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு தெரிவித்துள்ளார்.

கடற்படை முகாமிற்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி: மக்கள் போராட்டம்(Photo) | Attempt Expropriate Public Lands Struggle

காணிகளை வழங்க முன்வந்தவர்கள் என தென்பகுதியை சேர்ந்த மூன்று காணி உரிமையாளர்கள் அங்கு வருகை தந்திருந்துள்ளனர். இருப்பினும் 15 பேர் காணிகளை வழங்க முன்வந்திருப்பதாக நில அளவை அதிகாரி தெரிவித்திருந்தமைக்கமைய ஏனைய எவரும் அவ்வேளையில் அங்கு வருகை தரவில்லை .

தீர்வு

இதனையடுத்து, “15 பேர் காணி வழங்க முன் வந்திருப்பின் அதே பகுதியில் எமது காணிகளும் கடற்படையினரால் வேலி போட்டு மறித்து அடைக்கப்பட்டுள்ளது. 

எனவே கடற்படை முகாமுக்கு காணி வழங்க முன்வந்தவர்களுக்கு காணிகளை அளவீடு செய்து வழங்குவதற்கு முன் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள எமக்குரிய காணிகளையும் அடையாளப்படுத்தி அளவீடு செய்து எமக்கு வழங்கிவிட்டு கடற்படை முகாமுக்கு காணி வழங்க முன் வந்தவர்களின் காணிகளை அளவீடு செய்யுமாறு” எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் நில அளவையாளரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மக்களின் கோரிக்கையை ஏற்று கடிதம் ஒன்று கையொப்பமிட்டு வழங்கியதையடுத்து நில அளவையாளர்கள் திரும்பி சென்றுள்ளனர்.

கடற்படை முகாமிற்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி: மக்கள் போராட்டம்(Photo) | Attempt Expropriate Public Lands Struggle

நில அளவீட்டு பணிகளுக்கு எதிர்ப்பை தெரிவித்து மக்கள் போராட்டம் மேற்கொண்ட போது அப்பகுதியில் கடமையிலிருந்த பொலிஸார் பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியயுள்ளதுடன்,  புலனாய்வாளர்கள் , கடற்படையினர் மற்றும் தென்பகுதியிலிருந்து வருகைதந்தவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட மக்களை தொலைபேசியில் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டுள்ளனர் என எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த எதிர்ப்பு போராட்டத்தில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ரவிகரன் மற்றும் சிவநேசன் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கடற்படை முகாமிற்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி: மக்கள் போராட்டம்(Photo) | Attempt Expropriate Public Lands Struggle

கடற்படை முகாமிற்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி: மக்கள் போராட்டம்(Photo) | Attempt Expropriate Public Lands Struggle

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கனடா, Canada

27 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Zürich, Switzerland

25 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Basel, Switzerland

25 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, Kuala Lumpur, Malaysia

26 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, சிவபுரம், வவுனிக்குளம், வவுனியா, பாண்டியன்குளம்

26 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

22 Jan, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Toronto, Canada

11 Feb, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், திருச்சி, India

29 Jan, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி தெற்கு, London, United Kingdom

28 Jan, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, காரைநகர், Birmingham, United Kingdom, Croydon, United Kingdom

21 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டி, நாவற்குழி, London, United Kingdom

30 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Lausanne, Switzerland

28 Jan, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கனடா, Canada

27 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Scarborough, Canada

27 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, தெஹிவளை

07 Feb, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kingston, United Kingdom, Wallington, United Kingdom

30 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், நோர்வே, Norway

16 Jan, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, சிட்னி, Australia, Thun, Switzerland

08 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சாய் தெற்கு, Rinteln, Germany

07 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Horsens, Denmark

23 Jan, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Washington, United States

19 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Bremgarten, Switzerland

24 Jan, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்புத்துறை, கொழும்பு, London, United Kingdom

22 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

28 Jan, 2024
அந்தியேட்டிக் கிரியையும், 31ம் நாள் நினைவஞ்சலியும்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, பேர்ண், Switzerland

30 Jan, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
மரண அறிவித்தல்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் தலையாழி, Jaffna, Saint-Ouen-l'Aumône, France

19 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொக்குவில், வட்டக்கச்சி, Gagny, France

21 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US