மூன்று அமைச்சர்களின் நிதி ஒதுக்கீட்டை தோற்கடிக்கும் முயற்சியில் மொட்டுக்கட்சி
தெரிவு செய்யப்பட்ட மூன்று அமைச்சர்களின் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு யோசனைகளை தோற்கடிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
மொட்டுக்கட்சியினருக்கு உதவவில்லை என்று குற்றச்சாட்டு
பொதுஜன பெரமுனவினரை புறந்தள்ளியமை, சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மூலம் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வித உதவியையும் வழங்கவில்லை போன்ற குற்றச்சாட்டுக்களை அடிப்படையாக கொண்டு மூன்று அமைச்சர்களின் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு யோசனையை தோற்கடிக்க அந்த கட்சியினர் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
விஜயதாச ராஜபக்ச, நிமல் சிறிபால டி சில்வா, நசீர் அஹமட் ஆகிய அமைச்சர்களின் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டையே தோற்கடிக்க இவர்கள் தீர்மானித்துள்ளனர்.
இது சம்பந்தமாக ஏனைய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தவும் பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
