ஊழியர்கள் மீதான தாக்குதல் குற்றச்சாட்டு : இலங்கை மின்சார சபை கடும் மறுப்பு
இலங்கை மின்சார சபை ஊழியர்கள் ஒருவரைத் தாக்கியதாகச் சில ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை அந்தச் சபை முற்றாக மறுத்துள்ளது.
இது குறித்து இலங்கை மின்சார சபையின் பிரதிப் பொது முகாமையாளர் நோயல் பிரியந்த வெளியிட்டுள்ள விளக்கத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு குழுவினர் ஒருவரைத் தாக்கும் காட்சிகள் அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களிலும் சில ஊடகங்களிலும் பகிரப்பட்டு வருகின்றன.
உண்மையான தகவல்
இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மின்சார சபை ஊழியர்கள் என அந்தச் செய்திகளில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

அந்த சம்பவத்திற்கும் இலங்கை மின்சார சபைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், அதில் ஈடுபட்டவர்கள் எவரும் மின்சார சபை ஊழியர்கள் அல்ல என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான தவறான செய்திகளால் பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற புரிதல்கள் மற்றும் அதிருப்தி ஏற்படக்கூடும் என்பதால், உண்மையான தகவலைப் பகிருமாறு அவர் ஊடக நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 9 மணி நேரம் முன்
அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! Manithan
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri