யாழில் 368 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது! இருவர் தப்பியோட்டம்
யாழ்ப்பாணத்தில் 368 கிலோ கிராம் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து கேரளா கஞ்சாவை படகில் கடத்தி வருவதாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
படகில் மூவர் கஞ்சாவை கடத்தி கரை சேர்க்க முயன்ற வேளையில், பதுங்கியிருந்த பொலிஸார் அவர்களை கைது செய்ய முயன்றபோது மூவரும் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.
இதன்போது ஒருவரை மடக்கிப் பிடித்துள்ளதுடன், மற்றைய இருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

அத்துடன், கடத்தி வந்த கஞ்சா பொதிகள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு மற்றும் வெளிப்புற இயந்திரம் உள்ளிட்ட பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளன.
தீவிர சோதனை
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் வேலணை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தப்பிச் சென்ற நபர்களை கைது செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 17 மணி நேரம் முன்
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan