பாகிஸ்தான் மீதான தாக்குதல் பின்னணியில் இந்தியாவின் பெண் அதிகாரிகள்!
பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஒபரேஷன் சிந்தூர்(operation-sindoor) என்ற பெயரில் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
குறித்த தாக்குதலானது இந்தியாவின் முக்கிய இரு பெண் அதிகாரிகளின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டதாக இந்திய பாதுகாப்ப துறை விளக்கமளித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் 4 இலக்குகள், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் 3 இலக்குகள் மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் 2 இலக்குகள் என 9 பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன.
பஹல்காம் தாக்குதல்
எனினும், பாகிஸ்தான் இராணுவத் தளவாடங்கள் மீது எந்தவிதத் தாக்குதலையும் இந்தியா நடத்தவில்லை.
இதனிடையே ஒபரேஷன் சிந்தூர்(operation-sindoor) வெற்றிகரமாக நடத்தப்பட்டது எப்படி? தகர்க்கப்பட்ட இடங்கள் என்னென்ன? என்பதை வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியுடன் அந்நாட்டு இராணுவத்தின் கர்னல் சோபியா குரேஷி, விமானப் படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் விளக்கினர்.
இந்தத் தாக்குதல் குறித்து இரு பெண் அதிகாரிகள் விளக்கியது ஏன்? என்ற கேள்விக்கு பஹல்காம் தாக்குதலின்போது நடந்த சம்பவமே பதிலாக கூறப்படுகிறது.
பஹல்காமில் மனைவி முன்பு கணவரைக் கொன்ற பயங்கரவாதிகள், பெண்களைக் கொல்லமாட்டோம்; இதனை உங்கள் பிரதமரிடம் சொல்லுங்கள் எனக் கூறினர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பெண் அதிகாரிகளைக் கொண்டே ஒபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது.
கர்னல் சோபியா குரேஷி
ஆசிரியர் பணியை விடுத்து இராணுவத்தில் இணைந்தவர். இராணுவப் படை கர்னல் சோபியா குரேஷி. குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்தவர் சோபியா குரேஷி. இவரின் தந்தையும், தாத்தாவும் இந்திய இராணுவத்தில் பணியாற்றியுள்ளனர்.
When life makes you a Muslim, be like Sofiya Qureshi not like Rona Ayyub#OperationSindoor #IndianArmy !! pic.twitter.com/RfxaHOM49Z
— IPL Camera girl 📸 (@Shinykid111) May 7, 2025
பன்னாட்டு இராணுவப் பயிற்சியில் இந்திய ராணுவப் படைக்குத் தலைமை தாங்கிய முதல் பெண் அதிகாரி என்ற பெருமைக்குரிய சோபியா குரேஷி, 2006 ஆம் ஆண்டு காங்கோவில் நடைபெற்ற ஐ.நா. அமைதிப் படையில் இந்தியாவின் பிரதிநிதியாகவும் பங்கேற்றார்.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற போர்ஸ் 18 கூட்டு இராணுவப் பயிற்சியில் இந்திய படையை சோபியா குரேஷி வழிநடத்தினார்.
வியோமிகா சிங்
ஒபரேஷன் சிந்தூர் தொடர்பாக விளக்கமளித்த மற்றொரு பெண் அதிகாரி வியோமிகா சிங்.
குழந்தைப் பருவம் முதலிருந்தே வானில் பறப்பதை கனவாகக் கொண்டவர்.
2019 ஆம் ஆண்டு விமானப் படையின் உலங்கு வானூர்தி விமானியாக இணைந்த வியோமிகா சிங், வானில் 2,500க்கும் அதிகமான மணி நேரம் பறந்து சாதனை படைத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் தொடங்கி இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் உள்ள சவாலான நிலப்பரப்புகளில் ஹெலிகாப்டர்களை திறம்பட இயக்கிய பெருமைக்குரியவர்.
2020 ஆம் ஆண்டு அருணாசலில் ஏற்பட்ட பனிப்பொழிவு மற்றும் வெள்ள காலத்தில் மக்களை மீட்கும் பணியில் முக்கிய பங்காற்றியவர்.

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam
