பயங்கரவாத உள்கட்டமைப்பை அழித்தது நியாயமானது! ரிஷி சுனக் வெளிப்படை
பயங்கரவாத உள்கட்டமைப்பை அழித்தது நியாயமானது என பிரித்தானியாவின் கனேடிய முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார்.
பகல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பிரதேசமான காஷ்மீரில் ஒபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், இந்திய நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தாக்குதல்
வேறொரு நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்திலிருந்து தனக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படுவதை எந்த நாடும் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், பயங்கரவாத உள்கட்டமைப்பை இந்தியா தாக்குவதில் நியாயம் உள்ளது. பயங்கரவாதிகளுக்கு இதை விட எந்தத் தண்டனையும் இருக்க முடியாது. இவ்வாறு ரிஷி சுனக் கூறியுள்ளார்.

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam
