யாழில் வன்முறைக்குழு தாக்குதல்: நகை மற்றும் பணம் கொள்ளை

Jaffna Sri Lanka Police Investigation Northern Province of Sri Lanka
By Kajinthan Dec 07, 2023 12:57 PM GMT
Report

யாழ்ப்பாணம் - கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீதியால் சென்ற இளைஞன் மீது வன்முறைக் குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

குறித்த தாக்குதல் நேற்று(06.12.2023) இடம்பெற்றுள்ளதுடன், இளைஞனின் வீட்டிற்குச் சென்று பெறுமதியான உடமைகளை அடித்து நொறுக்க்கப்பட்டு வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களும் திருடிச்செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

தமிழ் அரசியல்வாதிகளுக்கு சரத் வீரசேகர எச்சரிக்கை (Video)

தமிழ் அரசியல்வாதிகளுக்கு சரத் வீரசேகர எச்சரிக்கை (Video)

பணம் மற்றும் நகைகள் கொள்ளை

தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் தனது நண்பருடன் மோட்டார்சைக்கிளில் வீடு நோக்கிச் சென்றுள்ளார். இதன் போது வெள்ளாம்போக்கட்டி சீலன் வீதி பகுதியில் வைத்து வழிமறித்த குழுவொன்று இளைஞன் மீது தாக்குதல் நடத்தியதுடன், இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிளையும் அடித்து சேதப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

மேற்படி குழுவின் தாக்குதலில் இருந்து தப்பித்த இளைஞன் அருகில் உள்ள வீடு ஒன்றில் தஞ்சம் புகுந்த நிலையில் வன்முறைக் கும்பல் அந்த வீட்டின் முன்பாக பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்புக் கருவிகளையும் அடித்து சேதப்படுத்தியுள்ளது.

யாழில் வன்முறைக்குழு தாக்குதல்: நகை மற்றும் பணம் கொள்ளை | Attack On Youth In Jaffna Kodugamam

தொடர்ந்து வெள்ளாம்போக்கட்டி பகுதியில் உள்ள இளைஞனுடைய வீட்டிற்கு சென்று வெளிக்கதவு, கண்ணாடிகள்,தொலைக்காட்சி, குளிர்சாதனப்பெட்டி உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை அடித்து சேதப்படுத்தியதுடன் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 7இலட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகள் ஆகியவற்றையும் திருடி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும், தாக்குதலுக்கு உள்ளன இளைஞன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய தமிழர் அமைப்பு ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பு

பிரித்தானிய தமிழர் அமைப்பு ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பு

போதைப்பொருள் வர்த்தகரின் பெண் சகா அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பில் கைது

போதைப்பொருள் வர்த்தகரின் பெண் சகா அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பில் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US