யாழில் கல்-கம்பிகளால் மூவர் மீது தாக்குதல்
யாழ்(Jaffna) வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் இன்று(19) மாலை மூவர் மீது மோசமான தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருகையில்,
குடும்ப தகராறின் காரணமாக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபர் ஒருவர் தனது தந்தை மீதும், சகோதரன் மீதும், சகோதரனின் மகன் மீதும் வவுனியா பகுதியில் இருந்து (NP CAH - 0636) என்ற இலக்கமுடைய வாகனத்தில் ஆட்களை அழைத்து வந்து வீட்டிற்குள் புகுந்து கம்பி, கற்களால் தாக்குதல் நடாத்தியதாக தெரியவருகின்றது.
தாக்குதல்
வாகனத்தில் வருகை தந்த தாக்குதல் கும்பல் வானத்திற்குள் வாள்களை மறைத்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
அடி காயங்களுக்குள்ளான மூவரும் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
You May Like This..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |