பிரபல நடிகையின் மகள் மீது தாக்குதல் - முடியை வெட்டி எடுத்த பெண்
பாணந்துறை, கெஸெல்வத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள அழகு கலை நிலையத்தின் உரிமையாளரான பெண் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் அவரது தலைமுடியையும் வெட்டியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
தாக்குதலுக்குள்ளான பெண்ணுடன் தொடர்பில் இருந்த நபரின் மனைவி மற்றும் மேலும் 2 பெண்களினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண், பிரபல நடிகையின் மகள் என தெரிவிக்கப்படுகிறது. அவருக்கு தாக்குதல் மேற்கொண்ட பெண்கள் மூவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் பயண கட்டுப்பாட்டினை மீறியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் ஒரு லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 22 மணி நேரம் முன்
ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி : இந்த ராசியினர் வாழ்வில் தொட்டதெல்லாம் பொன்னாகும்! உங்க ராசியும் இருக்கா? Manithan