கிளிநொச்சியில் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர் வீட்டின் மீது தாக்குதல்
கிளிநொச்சி (Kilinochchi) - அம்பாள் குளம் கிராமத்தில் ஐக்கிய மக்கள் சக்தி (SLB) ஆதரவாளர் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று (13) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இறுதியாக நடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது குறித்த வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் வெற்றி பெற்றார்.
பொலிஸார் விசாரணை
இதன்போது, குறித்த வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர பிரசார நடவடிக்கைகள் ஈடுபட்ட ஆதரவாளர் ஒருவரின் வீட்டின் மீது நேற்று நள்ளிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக குறித்த வீட்டின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

ஓவர்சீஸில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள நடிகர் ரஜினியின் கூலி... அதிகாரப்பூர்வமாக வந்த தகவல் Cineulagam

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri
