சமுர்த்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல்
வவுனியா கந்தபுரம் சமுர்த்தி காரியாலயத்திற்குள் கடமையில் இருந்த சமுர்த்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
இன்று (12) காலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கந்தபுரம் பிரிவில் பணிபுரியும் சமுர்த்தி உத்தியோகத்தர் அவரது காரியாலயத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த போது அலுவலகத்திற்கு வந்த நபர் ஒருவர் தனது சமுர்த்தி கொடுப்பனவை நீக்கியதாக கூறி முரண்பட்டதுடன் குறித்த உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான சமுர்த்தி உத்தியோகத்தர் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலை பொலிஸார் மேலதிக
விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam