திருகோணமலையில் நகரசபை ஊழியர் மீது தாக்குதல்

Sri Lankan Tamils Trincomalee Eastern Province
By Independent Writer Jun 30, 2024 01:58 PM GMT
Report
Courtesy: H A Roshan

திருகோணமலை நகரசபை ஊழியரின் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை அண்மித்த கடைத்தொகுதி ஒன்றில் தடை செய்யப்பட்ட கசிப்பு ரக மதுபானம் விற்பனை செய்யப்பட்ட கடையானது திருகோணமலை நகரசபையினரால் முத்திரை குத்தப்பட்டு பூட்டப்பட்டது.

இதன் பின்னணியிலேயே நகரசபை ஊழியர் தாக்கப்பட்டுள்ளதாக நகரசபையின் செயலாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.

திருக்கோணேஸ்வரர் ஆலய கடைத்தொகுதியில் கசிப்புடன் ஒருவர் கைது

திருக்கோணேஸ்வரர் ஆலய கடைத்தொகுதியில் கசிப்புடன் ஒருவர் கைது

தடை செய்யப்பப்பட்ட மதுபான விற்பனை

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், 

கடந்த வாரம் திருகோணமலை - திருகோணேஸ்வர ஆலயத்தினை அண்மித்த கடை ஒன்றில் தடை செய்யப்பப்பட்ட கசிப்பு வகை மதுபானம் விற்பனை செய்ததாக கருதப்பட்டு குறித்த கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

திருகோணமலையில் நகரசபை ஊழியர் மீது தாக்குதல் | Attack On Municipal Employee In Trincomalee

இந்நிலையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்றைய தினம் 30.06.2024 குறித்த கடைக்கு முத்திரை குத்தி பூட்டப்பட்டதாக திருகோணமலை நகரசபை செயலாளர் தே.ஜெய விஷ்னு செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்று நகரசபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டு மக்களுக்கு சந்திரிக்கா பண்டாரநாயக்க வெளியிட்ட அறிவிப்பு

நாட்டு மக்களுக்கு சந்திரிக்கா பண்டாரநாயக்க வெளியிட்ட அறிவிப்பு

நகரசபை அதிகாரிகள்

குறித்த பகுதிக்கு நகரசபை அதிகாரிகள் விரைந்து அதனை முத்திரையிட்டு மூடுவதற்கான நடவடிக்கைகளை மேட்கொண்ட போது அங்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் அரச கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதோடு நகரசபை உத்தியோகத்தர் ஒருவரும் தாக்கப்பட்டுள்ளார் எனவும் கூறியுள்ளார்.

திருகோணமலையில் நகரசபை ஊழியர் மீது தாக்குதல் | Attack On Municipal Employee In Trincomalee

இதன்போது தாக்கப்பட்ட நபர் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் நகரசபை செயலாளர் கூறியுள்ளார்.

மேலும் குறித்த காக்குதல் இடம்பெற்றபோது அங்கு நின்றுகொண்டிருந்த பொலிஸார் அதனை தடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

சிறைச்சாலையில் ஹிருணிகாவின் ஆடைகளின் நிலை

சிறைச்சாலையில் ஹிருணிகாவின் ஆடைகளின் நிலை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US