திருக்கோணேஸ்வரர் ஆலய கடைத்தொகுதியில் கசிப்புடன் ஒருவர் கைது
திருகோணமலை(Trincomalee) - திருக்கோணேஸ்வரர் ஆலய கடை தொகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (23.04.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
மிகிந்த புரம் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் கடைத் தொகுதியில் இளநீர் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரே கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுள்ளார்.

சந்தேகநபர் 15 போத்தல்களில் 14 போத்தல்களை விற்பனை செய்துள்ள நிலையில் எஞ்சியுள்ள ஒரு போத்தலுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அத்துடன், கைது செய்யப்பட்ட நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் நாளை (25)திருகோணமலை நீதிமன்ற நீதவானிடம் முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையகப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மீண்டும் காமெடி ரூட்டிற்கு திரும்பும் நடிகர் சந்தானம்... இந்த முறை யாருடைய படம் தெரியுமா? Cineulagam
குணசேகரனை ஆட்டிப்படைக்க மாஸ் என்ட்ரி கொடுத்த புதிய நபர், யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam