அம்பாறையில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்: சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்
அம்பாறை (Ampara) மாவட்ட ஊடகவியலாளர் அசேல உபேந்திர மீது தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு சந்தேக நபர்களை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நேற்றையதினம் (3) நான்கு சந்தேக நபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் மாவட்ட நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிபதி தெசீபா ரஜீவன் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் சம்மாந்துறை பொலிஸார் இறக்காமம் பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.
கைது
அத்துடன் மேலதிக விசாரணைகளை இறக்காமம் பொலிஸார் முன்னெடுத்திருந்ததுடன் செய்தியாளரை தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் மேலும் மூன்று சந்தேக நபர்களை அன்றைய தினம் இரவு கைது செய்திருந்தனர்.
இதற்கமைய குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 09 சந்தேக நபர்கள் சம்மாந்துறை மற்றும் இறக்காமம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
இதில் சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ஆறு பேரில் ஒரு சந்தேக நபரும் இறக்காமம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 03 சந்தேக நபர்களும் குறித்த சம்பவத்துடன் நேரடியாக தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
விளக்கமறியல்
ஏனைய 05 சந்தேக நபர்களும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் 4 சந்தேக நபர்களும் அக்கரைப்பற்று மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதனையடுத்து, சந்தேக நபர்கள் நால்வரையும் எதிர்வரும் ஜனவரி 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அன்றைய தினம் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

கணவன் உடலை டிரம்மில் வைத்து அடைத்த நிலையில்.., மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள் News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
