வவுனியாவில் கிராமசேவகர் மீது தாக்குதல்
வவுனியா தாண்டிக்குளம் பிரிவு கிராமசேவகர் மீது நபர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றையதினம் மகாறம்பைக்குளம் பகுதியில் இடம்பெற்றது.
வவுனியா தாண்டிக்குளம் ஏ9 வீதியின் புகையிரத தண்டவாளத்திற்கும், பிரதான வீதிக்கும் இடையே உள்ள அரசுக்கு சொந்தமான காணியில் சில நபர்கள் சுற்றுவேலி அமைத்து, வியாபார நிலையங்களையும் அமைத்திருந்தனர்.
குறித்த விடயம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளிற்கமைய கடந்த 9 ஆம் திகதி அப்பகுதிக்கு சென்ற வவுனியா பிரதேச செயலாளர் தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அனுமதியற்ற வியாபார நிலையங்களை அகற்றியிருந்தார்.
குறித்த சம்பவத்தினை சுட்டிக்காட்டி தாண்டிக்குளம் பிரிவு கிராமசேவகர் மீது நபர் ஒருவர் நேற்றையதினம் (15) தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக கிராம சேவகரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது. தாக்குதல் மேற்கொண்டநபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 19 மணி நேரம் முன்
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam