Flydubai விமானி மீதான தாக்குதல்: அவுஸ்திரேலியாவுடன் தொடர்புடைய பின்னணி தொடர்பில் தீவிர விசாரணை
துபாயில் இருந்து டெல் அவிவ் நகருக்குப் புறப்பட்ட “ஃப்ளைதுபாய் (flydubai)” விமானத்தில், பிரதான விமானியை அதன் உதவி விமானி அவசர கால கோடாரியால் தாக்கிய சம்பவம் தொடர்பாக அவுஸ்திரேலிய பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை “பயங்கரவாதத் தாக்குதல்” என ஐக்கிய அரபு இராச்சிய தலைமை அரசின் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.
தாக்குதலை நடத்திய உதவி விமானி ஓமன் நாட்டைச் சேர்ந்த ஹம்மாம் அல் - ஹம்மாமி என்றும் அடையாளம் காணப்பட்ட நிலையில், இவர், அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்றவர் என தெரியவந்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் கற்றவர்
அவுஸ்திரேலியாவில் இருந்த காலத்தில் தீவிரவாதக் கருத்துடைய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் இணையத்தளங்களைப் பார்வையிட்டுள்ளதாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்தே, அவுஸ்திரேலிய கூட்டாட்சி பொலிஸார் மற்றும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு (ASIO) ஆகியன உள்ளடங்கிய பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினர், இவருடன் தொடர்புடைய அவுஸ்திரேலிய பின்னணிகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சம்பவம் குறித்து முழுமையான விசாரணைகள் நடைபெற்று வருவதாக ஃப்ளைதுபாய் நிறுவனமும் அறிவித்துள்ளது.
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri