நள்ளிரவில் நடந்த தாக்குதல் - படுகாயமடைந்த மருத்துவமனை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்
சிலாபம் பொது மருத்துவமனையில் மூன்று பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது இரண்டு நபர்கள் நடத்திய தாக்குதலில், இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(14.06.2026)இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிபோதையில் இருந்த ஒருவரும் மற்றொரு நபரும் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் ஒரு நோயாளியைப் பார்வையிட வலுக்கட்டாயமாக உள்ளே நுழைய முயன்றுள்ளனர்.
60 நாட்கள் விதிக்கப்பட்ட தடை உத்தரவு - சட்டவிரோதமாக சென்ற 500 கடற்றொழிலாளர்கள் மீது அதிரடி நடவடிக்கை
இருவர் படுகாயம்
பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவர்களைத் தடுக்க முயன்றபோது இந்தத் தாக்குதல் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலில் காயமடைந்த இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் தற்போது சிலாபம் மருத்துவமனையிலேயே உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக மருத்துவமனை அதிகாரிகள் சிலாபம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியடுத்து, தாக்குதலை நடத்திய இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.