அலுத்கம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மீது தாக்குதல்
அலுத்கம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மீது இன்றைய தினம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.
நீதிமன்றின் உத்தரவு ஒன்றை அமுல்படுத்தும் நோக்கில் அலுத்கம, மொரகல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு நீதிமன்ற அதிகாரிகளும் பொலிஸாரும் இன்று சென்றுள்ளனர்.
இதன்போது குறித்த வீட்டில் இருந்தவர்கள் பொலிஸாருக்கும், நீதிமன்ற அதிகாரிகளுக்கும் இடையூறு விளைவித்துள்ளனர்.
இதனை அறிந்து கொண்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அந்த இடத்திற்கு சென்ற போது அங்கிருந்த நான்கு பேர் அவரை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் இரண்டு பெண்களுக்கும் தொடர்பு உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேரையும் பொலிஸார் கைது செய்துள்ள நிலையில் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன





இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

1000 கிமீ தூரத்தை அடையும் சீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை: இந்தியா உள்பட பல நாடுகளுக்கு எச்சரிக்கை News Lankasri

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
