யாழில் பாடசாலையில் புதிதாக இணைந்த மாணவன் மீது தாக்குதல்
யாழ்ப்பாணம் வடமராட்சியில் தரம் 6 இற்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட மாணவன் மீது தரம் 10இல் கல்வி கற்கும் சில மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த தாக்குதல் காரணமாக காது வழியாக குருதி வந்த நிலையில் மாணவன் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார் என தெரியவருகிறது.
நெல்லியடிப் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் கடந்த வியாழக்கிழமை இந்தச் சம்பவம் நடை பெற்றுள்ளது.
முறைப்பாடு
மேலும் தெரியவருகையில்,
தரம் 6இல் புதுமுக மாணவனாக குறித்த மாணவன் அந்தப் பாடசாலைக்குச் சென்றுள்ளான்.
மறுநாளே தரம் 10இல் கல்வி கற்கும் சில மாணவர்கள் இணைந்து புதுமுக மாணவனைத் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில் பெற்றோரால் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |