இலங்கையை விட்டு வெளியேறும் பல்லாயிரக்கணக்கான வல்லுநர்கள்
நாட்டை விட்டு வெளியேறும் தொழில் வல்லுநர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டை விட்டு வெளியேறும் இலங்கையர்கள்
இது தொடர்பில் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள தரவுகளில்,
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளுக்கு தொழிலுக்காகச் செல்லும் இலங்கையர்களில் 41 சதவீதமானவர்கள் தொழில் வல்லுநர்கள் அல்லது ஏதோ வகையில் திறமைமிக்கவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதுடன், 2023ஆம் ஆண்டில் மாதாந்தம் வெளிநாடு சென்றோரின் எண்ணிக்கை 25,000ஆக உயர்ந்துள்ளது.
அதன்படி, ஒரு வருடத்தில் சுமார் மூன்று இலட்சம் இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர் அல்லது வேலைக்காக வெளிநாடு செல்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri
ஜனனி உயிருடன் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடையும் குணசேகரன்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.. Cineulagam