ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது மீண்டும் ஏவுகனை தாக்குதல் முயற்சி- தடுக்கப்பட்டதாக தகவல்!
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று அபுதாபி மீது இரண்டு ஏவுகணைகளை வீசி தாக்க முயற்சித்ததாகவும் அவற்றை இடைமறித்து அழித்ததாகவும் ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.
ஏமனில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் கடந்த 6 ஆண்டுகளாக அரசுக்கு ஆதரவாகவும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவும் சவுதி தலைமையிலான கூட்டு படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், கடந்த 17-ஆம் திகதியன்று அபுதாபி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து சவுதி தலைமையிலான படை, சனாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது வான்வழி தாக்குதலை நடத்தியது.
இந்த நிலையிலேயே ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இரண்டு ஏவுகணைகளை தங்களை நோக்கி வீசியதாகவும் அதனை வானிலேயே இடைமறித்து தாக்கி அழித்ததாகவும் ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
