மது போதையில் வீடொன்றுக்குள் நுழைந்து தாக்குதல் மேற்கொண்ட குழுவினர்
மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு 5ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் நேற்று மாலை தாக்குதல் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
மது போதையில் குறித்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த சுமார் 15 பேர் கொண்ட குழுவினர் வீட்டில் இருந்தவர்களை கடுமையாக தாக்கிவிட்டு சென்றுள்ளனர்.
இதன்போது வீட்டின் உரிமையாளரான அன்ரனி ஜோசப் (வயது 44) என்பவர் கடும் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் பள்ளமடு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த வீட்டில் உள்ள 18 வயதுடைய இதய நோய் உள்ள யுவதி ஒருவரையும்,15 வயதுடைய மாணவி ஒருவரையும் தாக்கியுள்ளதுடன், குறித்த இரு யுவதிகளும் தற்போது பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
வீடு கடுமையான தாக்குதலுக்கு இலக்காகி சேதமடைந்துள்ளதுடன் நேற்று இரவு குறித்த பகுதிக்குச் சென்று பொலிஸார் நிலைமைகளை அவதானித்துள்ளதுடன் விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், யாழ். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள அன்ரனி ஜோசப் (வயது 44) சுய நினைவற்ற நிலையில் உள்ளதாக உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.



மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam