சுதந்திரபுரம் சந்தியில் இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதல்! இருவர் படுகாயம்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சுதந்திரபுரம் சந்தியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்திற்குப் பின்பாக நேற்றிரவு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற முரண்பாடு கைகலப்பாக மாறியுள்ளது.
இதன்போது கூரிய ஆயுதங்கள் கொண்டு தாக்கப்பட்டதில் வீடு ஒன்றின் சில பொருட்கள் சேதமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரைப் புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
