வெளிநாடொன்றில் நிறுத்தப்பட்டிருந்த விமானத்தில் தொழில்நுட்பவியலாளருக்கு நடந்த கொடூரம்
ஈரானில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் விமானம் ஒன்றின் இயந்திரத்தில் சிக்கி தொழில்நுட்பவியலாளர் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவமானது ஈரானின் Chabahar Konarak விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
பராமரிப்பு வேலைகள்
உள்ளூர் தொழில்நுட்பவியலாளரான அபோல்பஸ்ல் அமிரி (Abolfazl Amiri) தனது வழக்கமான பராமரிப்பு வேலைகளை செய்துகொண்டிருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விமானத்தின் வலது இறக்கையில் உள்ள இயந்திரத்தை திறந்து சோதனைக்காக இயக்கப்பட்ட போது கவனக்குறைவாக நெருங்கிய அந்த தொழில்நுட்பவியலாளர் அதனுள் காணப்பட்ட இயந்திரத்தால் ஈர்க்கப்பட்டு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது இயந்திரம் தீ பற்றியெரிந்துள்ள நிலையில் உடனடியாக அவசர உதவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து விரைந்து வந்த அவசர உதவிக் குழுவினர் அந்த தொழில்நுட்பவியலாளரின் உடலை இயந்திரத்தில் இருந்து மீட்டுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து ஈரானிய விமான போக்குவரத்து ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
