ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம்! அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்படவுள்ள யோசனை குறித்து, அரசாங்கம் கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவாகளுடன் சந்திப்புக்களை நடத்தி வருகிறது.
வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த சந்திப்புக்களை நடத்தி வருகிறார். 2020 பெப்ரவரி 22 முதல் மார்ச் 18 வரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுக்கு முன்னதாக ஒரே கொள்கையை கொண்ட நாடுகளின் ஆதரவை திரட்டும் நோக்கில் இந்த சந்திப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.
இதன் ஒருக்கட்டமாக கடந்த செவ்வாயன்று தினேஸ் குணவர்த்தன, அமெரிக்காவின் தூதுவரை சந்தித்து கலந்துரையாடினார்.
இதற்கிடையில் பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மொண்டினீக்ரோ மற்றும் மெசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து, இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் போர்க்கால குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஒருமித்த தீர்மானத்தை சமர்ப்பிக்கவுள்ளன.
எனினும் இந்த தீர்மானத்திற்கான வரைவு தொடர்பில் இன்னும் இலங்கைக்கு தகவல்கள் வெளியாகவில்லை.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 7 மணி நேரம் முன்

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
