தமிழக முதல்வர் ஸ்டாலினை நெகிழ வைத்த இலங்கைத் தலைவர்களின் செயற்பாடு
இலங்கையில் இருக்கின்ற இந்த தமிழ் தலைவர்கள் இவ்வாறு தமிழர்களுக்கு மட்டுமன்றி முழு இலங்கையர்களுக்கும் உதவிகளை வழங்குங்கள் என்று கூறிய விடயம் தமிழக முதல்வர் ஸ்டாலினை நெகிழ வைத்திருக்கின்றது என இந்து பத்திரிகையின் சிரேஷ்ட இணை ஆசிரியர் டி. இராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் அதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இலங்கைக்கான தமிழகத்தின் அவசர உதவி சரியான நேரத்தில் பொருத்தமான தருணத்தில் தமிழக அரசினால் வழங்கப்படுகிறது. மார்ச் 31 ஆம் திகதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபோது மனு ஒன்றை கொடுத்திருந்தார். அதில் பல கோரிக்கைகள் இருந்தன.
அவசர காலச் சட்டம் என்றால் என்ன...! அதன் ஆபத்துக்களும் விளக்கங்களும் - ஒரு மீள் பார்வை |
இந்தக் கடிதப் பரிமாற்றம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் இலங்கையிலிருந்து தமிழ் தலைவர்கள் ஒரு கோரிக்கை விடுத்தார்கள். அதாவது இலங்கையின் தற்போதைய நெருக்கடியில் மக்களை பிரித்து பார்க்காமல் இலங்கை மக்களுக்கு என்ற ரீதியில் உதவுங்கள் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
பதுங்கு குழிகளில் ஒளிந்த ராஜபக்ச குடும்பம்: ராஜபக்சவினர் இல்லாத அரசாங்கத்தின் பொறுப்பை ஏற்க தயார் என்று அறிவிப்பு |
அதனை உள்வாங்கிக் கொண்ட தமிழக முதல்வர் ஏப்ரல் 29ஆம் தேதி சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றினார். இலங்கை தமிழ் தலைவர்களின் இந்த கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ந்து விட்டதாக கூறியிருந்தார்.
மேலும் இது இந்திய, இலங்கை உறவுகளை பலப்படுத்தும் என நான் பார்க்கிறேன். தமிழ்நாடு என்பது இந்தியாவின் மிக முக்கியமான மாநிலம். தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் மிக நீண்டகால உறவு இருக்கின்றது.
இந்தியாவில் பல மாநிலங்கள் இருந்தாலும் தமிழ் மாநிலம் ஒரு விசேடமான உறவை இலங்கையுடன் கொண்டிருக்கின்றது.
ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு அருகில் பதற்ற நிலை : களத்தில் கலகத் தடுப்புப் பொலிஸார் (Video) |
இதுபோன்ற ஒரு முயற்சி உதவி என்பது பொருத்தமான மற்றும் சரியான நேரத்தில் செய்யப்படுகிறது.
முன்னர் இருந்தே இலங்கைக்கு இந்தியா உதவி செய்து வருகிறது. குறிப்பாக யுத்த காலத்தில் கூட இந்தியா இலங்கைக்கு உதவி செய்திருக்கிறது.
அப்போதெல்லாம் வடக்கு, கிழக்குக்கு என்று உதவிகள் சென்றடைந்தன.
ஆனால் அந்த தருணம் வேறு தற்போதைய சூழல் வேறாக இருக்கின்றது. அந்த வேறுபட்ட சூழலைப் புரிந்துகொண்டு அந்த கருத்தை உள்வாங்கி இந்த உதவி அளிக்கப்படுகிறது.
இதனை சிங்கள மக்களும் புரிந்து கொள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இலங்கையில் இருக்கின்ற இந்த தமிழ் தலைவர்கள் இவ்வாறு தமிழர்களுக்கு மட்டுமன்றி முழு இலங்கையர்களுக்கும் உதவிகளை வழங்குங்கள் என்று கூறிய விடயம் தமிழக முதல்வரையே நெகிழ வைத்திருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.