ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு அருகில் பதற்ற நிலை : களத்தில் கலகத் தடுப்புப் பொலிஸார் (Video)
ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு அருகில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் ரணில் எதிர்ப்பு ஆதரவாளர் ஒருவரை எதிர்கொண்டதையடுத்து அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
களத்தில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டு வரும் நிலையிலும் தற்போது அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
தற்போது ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு அருகில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களை பொலிஸார் வீதியை விட்டு விலக கோரி பொலிஸார் அதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.
முதலாம் இணைப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு அருகில் தற்போது போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
தற்போது இடம்பெற்றுவரும் இந்த ஆர்ப்பாட்ட இடத்திற்கு கலகத் தடுப்புப் பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை போராட்டக்காரர்களை சந்திக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மறுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.