கொங்கோவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 22 பேர் பலி: விசாரணைகள் ஆரம்பம்!
கொங்கோ நாட்டில் கிளர்ச்சியாளர்களின் அமைப்பு நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 22 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதல் நேற்றைய தினம் (19.03.2023) இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ குடியரசில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடைபெற்றுவருகிறது. அதேவேளை, கொங்கோவில் பல்வேறு அமைப்பைச் சேர்ந்த குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.
ஒழிக்கும் நடவடிக்கை
குறித்த கிளர்ச்சிவாத அமைப்புக்களைச் சேர்ந்த குழுக்கள் அவ்வப்போது பொதுமக்கள் மீதும் பாதுகாப்புப் படையினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவங்களில் பலர் உயிரிழந்தும் வருகின்றனர். கிளர்ச்சியாளர்களை ஒழிக்கும் நடவடிக்கையில் கொங்கோ பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கொங்கோவின் கிழக்கு இடுரி மற்றும் வடக்கு கிவு மாகாணங்களில் நேற்றைய தினம் கிளர்ச்சியாளர்களின் அமைப்பு திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
விசாரணை
குறித்த மாகாணங்களில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்த கிளர்ச்சியாளர்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாகப் பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தாக்குதல் நடந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
