அஸ்வெசும நலன்புரித்திட்டம் விரைவில் இரத்து செய்யப்படுமா..!
தற்போதைய அரசாங்கம், அஸ்வெசும நலன்புரித்திட்டத்தை விரைவில் இரத்து செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் அநுராதபுரத்தில், நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அஸ்வெசும திட்டம் மக்களின் வறுமையைக் குறைப்பதற்குத் தவறிவிட்டதாகவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
சஜித்தின் கருத்து
ஒரு சமூகப் பாதுகாப்பு திட்டமானது, வறுமை ஒழிப்பு, முதலீடு, சேமிப்பு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை உறுதி செய்ய வேண்டும் எனவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

எனவே, இவ்வாறான ஒரு நிலையில் அரசாங்கம், அஸ்வெசும நலன்புரித்திட்டத்தை விரைவில் இரத்து செய்வதற்கு தீர்மானித்துள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அஸ்வெசும நலன்புரித்திட்டத்தின் காரணமாக வறுமை நிலையில் உள்ள மக்கள் மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள மக்கள் பலர் நன்மை அடைந்து வருகின்றார்கள்.
இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் மேற்கண்டவாறு குற்றம் சுமத்தியுள்ளமை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri