குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! இவ்வாரம் கிடைக்கும் பணத் தொகை
அஸ்வெசும பயனாளர்களுக்கான முதலாவது தவணை கொடுப்பனவு இவ்வாரத்தில் வழங்கப்படவுள்ளது.
சமூக நலன்புரி நன்மைகள் சபை இது தொடர்பான அறிவிப்பை விடுத்துள்ளது.
அஸ்வெசும திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கான வங்கி கணக்குகளைத் திறக்கும் செயற்பாடு 95 வீதம் நிறைவடைந்துள்ளது.
கொடுப்பனவுகள் வைப்பிலிடப்படும்
இந்தநிலையில் அஸ்வெசும பயனாளர்களுக்கு அவர்களின் பிரிவிற்கேற்ப மாதாந்தம் 15000, 8,500, 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
இதனிடையே, அஸ்வெசும திட்டம் தொடர்பாக கிடைத்துள்ள மேன்முறையீடுகள், ஆட்சேபனைகளை பரிசீலித்ததன் பின்னர், மற்றுமொரு பயனாளர்கள் குழு இந்த திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படுவர்.
அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் கீழ் 20 இலட்சம் பயனாளர்களின் வங்கி கணக்குகளில் கொடுப்பனவுகள் வைப்பிடலிடப்படவுள்ளதாக அந்த சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |