முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வில் குழப்பம் விளைவித்த பொலிஸார்
புதிய இணைப்பு
தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு, திருகோணமலையின் மூதூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வை பொலிஸார் இடையூறு செய்துள்ளனர்.
இதன்போது, பொலிஸ் அதிகாரிகள் நிகழ்விற்கு சென்று, நிகழ்வில் வைக்கப்பட்டிருந்த ஒரு பதாகையைக் கைப்பற்றி, ஏற்பாட்டாளர்களை விசாரணைக்காக அழைத்துள்ளனர்.
குறித்த பதாகையில், தமிழீழத்தை குறிக்கும் வகையில் கார்த்திகை மலர் இருந்ததாக கூறி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், ”ஜனாதிபதி இறந்தவர்களை நினைவு கூரலாம் என்று கூறியுள்ளார். அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்" என்று பங்கேற்பாளர்களில் ஒருவர் கூறியுள்ளார்.
பொலிஸாரின் இந்நடவடிக்கை காரணமாக கஞ்சி வழங்கும் நிகழ்வில் குழப்பநிலையும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு ஆயுத மோதலின் இறுதிக் கட்டங்களில் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களை நினைவு கூரும் வகையில், கடந்த ஒரு வாரமாக வடகிழக்கு முழுவதும் தமிழர்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சியை விநியோகித்து வருகின்றனர்.
பல ஆண்டுகளாக, வடகிழக்கில் உள்ள தமிழர்கள், குறிப்பாக தமிழர் இனப்படுகொலை நினைவு தினம் மற்றும் மாவீரர் நாள் போன்ற முக்கிய திகதிகளில் கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு வருவதாக பொதுமக்களால் குற்றம் சுமத்தப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனின் உதவியாளர் பொலிஸாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகத்தில் ஈடுபட்டமை தொடர்பிலேயே அவர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை
அத்துடன், சண்முகம் குகதாசனின் கள ஆய்வு உத்தியோகத்தரும் கட்சி ஆதரவாளர் ஒருவரும் பொலிஸாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam
