ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கம்மன்பிலவிடம் பிள்ளையான் கூறிய விடயம்! அரச சாட்சியாக அசாத் மௌலானா

Pillayan Udaya Gammanpila Ananda Wijepala
By Rakesh Jul 14, 2025 05:17 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் வாய்திறக்கவே இல்லை எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிடுவது முற்றிலும் பொய் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதலைப் பிள்ளையான் சிறையில் இருந்தவாறே முன்கூட்டியதாகவே அறிந்துள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே உதய கம்மன்பில மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடொன்றில் பொலிஸாரிடம் சிக்கிய இலங்கை குற்றவாளி - மனைவியுடன் தப்பியோட்டம்

வெளிநாடொன்றில் பொலிஸாரிடம் சிக்கிய இலங்கை குற்றவாளி - மனைவியுடன் தப்பியோட்டம்

விஜேபால பொய்யுரைத்தார்

மேலும் தெரிவிக்கையில், "பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால 2025.04.10 ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் 'தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் சர்ச்சைக்குரிய பல விடயங்களை விசாரணையின் போது குறிப்பிட்டுள்ளார்' என்று தெரிவித்தார்.

 ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கம்மன்பிலவிடம் பிள்ளையான் கூறிய விடயம்! அரச சாட்சியாக அசாத் மௌலானா | Pillaiyaan Never Spoke About Easter Sunday Attack

இதனை நம்பி ஜனாதிபதியும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை நாட்டு மக்களுக்குப் பகிரங்கப்படுத்துதாகக் குறிப்பிட்டார்.

பிள்ளையானை நான் சிறையில் சென்று சந்தித்தேன்.

குண்டுத் தாக்குதல் தொடர்பில் பிள்ளையானிடம் விசாரணை அதிகாரிகள் ஏதும் கேட்கவும் இல்லை, அவரும் ஏதும் குறிப்பிடவும் இல்லை.

ஆகவே, அமைச்சர் ஆனந்த விஜேபால பொய்யுரைத்தார் என்பதை ஊடகங்களிடம் தெரிவித்துக் கொள்கின்றேன்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்காகப் பிள்ளையான் கைது செய்யப்பட்டார் என்று குறிப்பிடுவது பொய், அவ்வாறு குறிப்பிடுபவர்களுக்குப் பைத்தியம்.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் உபவேந்தரைக் கடத்திக் காணாமல் ஆக்கிய சம்பவத்துக்காகவே பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி குறிப்பிட்டிருந்தார்.

ஆகவே, சுனில் ஹந்துனெத்தி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கும், ஜனாதிபதிக்கும் பதிலளித்துள்ளார்.

அஸாத் மௌலானாவை அரச தரப்பு சாட்சியமாக

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அண்மையில் நாடாளுமன்றத்தில் பிள்ளையான் பற்றி குறிப்பிட்டது முற்றிலும் பொய்யானது.

பிள்ளையான் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இரண்டு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் பிள்ளையான் தமிழ் மொழியில் வழங்கிய வாக்குமூலத்தின் பிரதியைப் பொலிஸார் நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்துள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கம்மன்பிலவிடம் பிள்ளையான் கூறிய விடயம்! அரச சாட்சியாக அசாத் மௌலானா | Pillaiyaan Never Spoke About Easter Sunday Attack

தமிழ் மொழி மூல வாக்குமூலம் ஆங்கில மொழிக்கு மொழிப்பெயர்க்கப்பட்டு எனக்குக் கிடைக்கப் பெற்றுள்ளது.

அந்த வாக்குமூலத்தில் எவ்விடத்திலும் குண்டுத் தாக்குதல் பற்றி குறிப்பிடப்படவில்லை. உபவேந்தர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் பற்றியே கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தமிழ்ப் பிரிவினைவாதிகளின் நிதியை இந்த அரசு பெற்றுக்கொண்டுள்ளது. தமிழ்ப் பிரிவினைவாதிகளை மகிழ்விப்பதற்கு விடுதலைப்புலிகளில் இருந்து விலகி இராணுவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையானைப் பலிகொடுக்க இந்த அரசு முயற்சிக்கின்றது.

நன்றிக் கடன் நிமித்தமே பிள்ளையானுக்காக முன்னிலையாகியுள்ளேன். இராணுவத்தினரே உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதலை நடத்தினர் என்று பிள்ளையான் ஊடாக வாய்மூல சாட்சியத்தைப் பெறவே இந்த அரசு முயற்சிக்கின்றது.

அஸாத் மௌலானாவை அரச தரப்பு சாட்சியமாக மாற்றிக்கொண்டு குண்டுத் தாக்குதலை இராணுவத்தினர் மீது சுமத்தவே அரசு முயற்சிக்கின்றது.

குண்டுத் தாக்குதல் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை. அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது." என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை பெண்ணொருவர் அதிரடி கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை பெண்ணொருவர் அதிரடி கைது!

நாட்டு மக்களுக்கு அதிக வரி - அரசியல்வாதிகளுக்கு கிடைக்கும் சலுகை

நாட்டு மக்களுக்கு அதிக வரி - அரசியல்வாதிகளுக்கு கிடைக்கும் சலுகை

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US