பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார்
தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் கோலோச்சிய கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என அழைக்கப்படும் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி தனது 87 வயதில் காலமானார்.
உடல்நலக்குறைவால் பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று திங்கட்கிழமை (14) காலமானார்.
காளிதாசா திரைப்படத்தின் மூலம்
நடிகை சரோஜா தேவி, கடந்த 1938 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் திகதி பிறந்தார்.
17 வயதிலேயே திரைப்படத் துறையில் அறிமுகமான இவர், தனது அற்புதமான நடிப்பால் இரசிகர்களின் விருப்பத்துக்குரிய நடிகையாக மாறினார்.
1955 ஆம் ஆண்டு மகாகவி காளிதாசா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்த சரோஜா தேவிக்கு அபிநய சரஸ்வதி என்ற பட்டமும் உண்டு.
ஒட்டுமொத்த திரையுலகினர்
இவருக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு இந்திய அரசிடமிருந்து வாழ்நாள் சாதனையாளர் விருதும், 1969 இல் பத்மஸ்ரீ விருதும், 1992 இல் பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டது.
இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார்.
இறுதியாக 2009ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ‘ஆதவன்’ படத்தில் நடித்திருந்தார்.
சரோஜா தேவியின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளதுடன் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
