தென்னிலங்கையில் ரிக்ரொக் காதலனால் சிறுமிக்கு நேர்ந்த கதி - அதிர்ச்சியில் பெற்றோர்
களுத்துறையில் டிக்டொக் மூலம் அறிமுகமான காதலன் ஒருவர் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தப்பியோடிய காதலனை கைது செய்ய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடக்கு களுத்துறை பொலிஸ் பிரிவில் வசிக்கும் மாணவி, ஜனவரி மாதம் ரிக்ரொக் மூலம் ஒருவருடன் அறிமுகமானார்.
ரிக்ரொக் காதலன்
இந்நிலையில் பெப்ரவரி மாதம் சிறுமி ரிக்ரொக் காதலனை தனது வீட்டிற்கு அழைத்து வந்து, தமது காதலை வெளிப்படுத்தியுள்ளார். சிறுமியின் பெற்றோரும் அவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் சிறுமியின் வீட்டில் காதலன் இரவை கழித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இந்த நிலையில், கடந்த 10 ஆம் திகதி குறித்த சிறுமி உடல்நலக்குறைவு காரணமாக தனது தந்தையுடன் ஹொரணை மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதன் போது சிறுமி கர்ப்பம் தரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ரிக்ரொக் காதலனின் முழுப் பெயரோ முகவரியோ தனக்கு தெரியாது என சிறுமி குறிப்பிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வடக்கு களுத்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துஷார டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri