12 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்ற உதவி சிறைச்சாலை அத்தியட்சகர் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
திருகோணமலை சிறைச்சாலையில் உதவி சிறைச்சாலை அத்தியட்சகராக கடமையாற்றும் அதிகாரி ஒருவர், சிறைக் கைதிகளுக்கான உணவு விநியோகத்துக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்களை வழங்கும் விநியோகஸ்தர் ஒருவரிடமிருந்து இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று(06.10.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உதவி சிறைச்சாலை அத்தியட்சகராக கடமையாற்றும் அதிகாரி 12 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்றதாக குற்றம் சாட்டபட்டே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார.
விளக்கமறியல் உத்தரவு
இதனைத் தொடர்ந்து, இன்று(07.10.2026) அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பொழுது, அவரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த சந்தேகநபரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி, எதிர்வரும் 28ஆம் திகதி அவருக்கு எதிரான விசாரணைகள் தொடர்பான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri